ஆஸி வீரர்களின் புதிய சம்பள ஒப்பந்த பிரச்சினை தொடர்கிறது!

Sunday, April 30th, 2017

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான 5 ஆண்டு கால ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய சம்பள ஒப்பந்தத்தை முடிவு செய்வது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என செய’;திகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய வருவாயை வீரர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் முறை கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையை ஒழித்து விட்டு, வருமானத்தில் 55 சதவீதம் கிரிக்கெட் வாரியத்துக்கும், 22.5 சதவீதம் வீரர்களுக்கும், மீதமுள்ள 22.5 சதவீதம் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் என்று பிரித்து கொள்ளலாம் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வைத்த திட்டத்தை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதால் நெருக்கடி நிலை நீடிக்கிறது.

Related posts: