ஆஷஸ் தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி! – அனுமதி வழங்கியது இங்கிலாந்து!

Sunday, December 4th, 2016

ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்டை பகலிரவாக மின்னொளியின் கீழ் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்டை பகல்-இரவாக மின்னொளியின் கீழ் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவுஸ்திரேலியாவில் இதுவரை இரண்டு பகல்-இரவு டெஸ்ட் நடந்துள்ளது. இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்ட இந்த இரண்டு டெஸ்டும் வர்த்தக ரீதியிலும், நேரில் கண்டுகளித்த ரசிகர்களின் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அத்தோடு விரைவில் பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவுடன் பகல்-இரவு டெஸ் போட்டிகளில் வியைளாட உள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போது இங்கிலாந்தும் பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அனேகமாக பிரிஸ்பேனில் இந்த டெஸ்ட் நடைபெறலாம், போட்டி அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Ashes-series-2013-2014-Australia-England1

Related posts: