ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை!

சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 44 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
19 வயதான இவர் 2015 ஆம் ஆண்டு தனது 16 வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரஷித்கான், 26 போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தற்போது உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடர் சிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 44போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் அவுஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைபடைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளின் பாதுகாப்பில் சிக்கல்!
கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் குறைபாடு
வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை!
|
|