ஆசிய ஹொக்கி கூட்டமைப்பு சம்பியன் கிண்ணம்: இலங்கை மகளிர் அணி வரலாற்று வெற்றி!
Saturday, October 8th, 2016
ஆசிய ஹொக்கி கூட்டமைப்பு சம்பியன் கிண்ண தொடரில் இந்தோனேஷிய மகளிர் அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி 19 கோல்களுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்றுவரும் நான்காவது ஆசிய ஹொக்கி சம்பியன் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில், இலங்கை மகளிர் அணியின் சார்பில், சதுரிகா விஜேசூரிய 9 கோல்களை போட்டு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இவற்றில் நேராக 3 கோல்களையும், பெனால்டி வாய்ப்பு மூலம் ஒரு கோலும், கோனர் ஷொட் மூலம் 5 கோல்களும் அடங்கும்.
அத்துடன், இமேஷா வீரபாபு 5 கோல்களையும் நயனா ஜயநெத்தி ஹட்றிக் கோல்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் தவிர கீதிகா கங்கெதுர மற்றும் சத்துரிகா பனாவல ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்தனர்

Related posts:
ஆஸிக்கு வெள்ளையடிக்குமா இலங்கை?
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வெளியேற்றப்பட்டார் ஜோகோவிச்!
இலங்கையில் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட வார்னே!
|
|
|


