ஆசிய கிண்ண ரி – 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

Friday, July 10th, 2020

15 ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர், கொவிட்-19 எதிரொலி காரணமாக, ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, ஆசிய கிண்ண தொடர், எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என ஆசிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உரிமத்தை பாகிஸ்தான் இலங்கையிடம் கொடுத்துவிட்டு, 2022ஆம் ஆண்டு தொடரை நடத்தும் உரிமத்தை விரும்பினால் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போதும், இந்தியா ௲ பாகிஸ்தான் பிரச்சினையால், பாகிஸ்தான் சொந்த நாட்டில் தொடரை நடத்துவதில் சிக்கலை எதிர்கொண்டிருந்தது.

ஆனால், இந்த தொடரை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதா என்பது குறித்தும் பாகிஸ்தான் தீர யோசித்துக் கொண்டிருந்தது. இந்தநிலையில், ஆசிய கிண்ண தொடர், எதிர்வரும் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆசிய கிண்ண தொடரை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: