ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!
Friday, June 16th, 20232023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படவுள்ளன.
இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஐந்தாவது முறையாக குயின்ஸ் கிண்ணத்தை வென்றார் முர்ரே
தனஞ்செய டி சில்வா அதிரடி: ஜிம்பாப்வேயை பந்தாடிய இலங்கை!!
டெஸ்ட் போட்டியிலிருந்து ஜே.பி டுமினி ஓய்வு?
|
|
|


