அஸ்வின், சாஹா அசத்தல்! இந்தியா முதல் இன்னிங்சில் 353 ஓட்டங்கள்!

Thursday, August 11th, 2016

மேற்கிந்திய தீவுக்கு எதிரான மூன்றவாது டெஸ்டில் அஸ்வின், சாஹாவின் சதம் கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 353 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.

இந்தியா- மேற்கிந்தி தீவுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் ஆகஸ்ட் 9ம் திகதி தொடங்கியது.

முதலில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் எடுத்தது. அஸ்வின் 75 ஓட்டங்களுடனும், சாஹா 46 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.ஆகஸ்ட 10ம் திகதி நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் அஸ்வின், சாஹா தங்களது அபார ஆட்டத்தை தொடர்ந்தனர். அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் அசத்திய சாஹா, டெஸ்ட் அரங்கில் முதல் சதமடித்தார். இந்திய அணி 339 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜோசப் பந்தில் சாஹா 104 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 6 ஓட்டங்களிலும், புவனேஷ்வர் குமார் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். தொடர்ந்து விளையாடிய அஸ்வின் 118 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இஷாந்த் சர்மா டக் அவுட்டானார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவு சார்பில் ஜோசப், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் எடுத்தது. பிராத்வெய்ட் 53 ஓட்டங்களுடனும், பிராவோ 18 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related posts: