அவுஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் சந்தித்த அவமானம்!

Sunday, January 8th, 2017

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ’ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்துள்ளது.

அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 538 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 315 ஓட்டங்கள் எடுத்தது. இதன் பின்னர் 223 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 465 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் பாகிஸ்தான் நேற்றைய 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 80.2 ஓவரில் 244 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் அவுஸ்திரேலியா 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியில் சர்பிராஸ் அகமது அதிக பட்சமாக 72 ஓட்டங்கள்எடுத்தார். ஹாசல் வுட், ஸ்டீவ் ஒகிபி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதன் மூலம் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று பாகிஸ்தானை ‘ஒயிட்வாஷ்’ செய்தது.டேவிட் வார்னர் ஆட்ட நாயகள் விருதையும், ஸ்டீவ் சுமித் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: