அவுஸ்திரேலிய மண்ணில் தோற்காத இலங்கை!

Tuesday, February 21st, 2017

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் விக்டோரியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது டி20 போட்டியின் முக்கிய அம்சங்கள் சில,

*இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 36 ஓட்டங்களை துரத்தி அடித்தது. அந்த அணி பெற்ற அதிகூடிய இலக்காகும். 2010 டி 20 அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 34 ஓட்டங்களை துரத்தி அடித்தது இதேபோன்ற பரபரப்பை ஏற்படுத்தியது.

*கடைசி ஒன்பது பந்துகளிலும் அசேல குணரத்னவின் ஓட்ட வேகம் 411.11 ஆகும். இதன்போது அவர் மூன்று பெளண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களுடன் 37 ஓட்டங்களை விளாசினார். அவர் தனது முதல் 37 பந்துகளில் நான்கு பெளண்டரி ஒரு சிக்ஸருடன் 47 ஓட்டங்களையே பெற்றார்.

*டி20 போட்டியில் 5ஆவது அல்லது அதற்கு கீழ் வந்த துடுப்பாட்ட வீரர் ஒருவர் வெற்றி இலக்கை அடைந்த நிலையில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் குணரத்ன எடுத்த 84 ஓட்டங்களுமே அதிகமாகும். 2013இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஜோ ரூட் 90 ஓட்டங்களை எடுத்த போதும் அந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.

*இலங்கை அணி அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி டி20 போட்டி ஒன்றிலாவது தோல்வியை சந்திக்காத ஒரே நாடு அவுஸ்திரேலியா மாத்திரமாகும்.

*மறுபுறம் அவுஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 5 டி20 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதில் மூன்று போட்டியில் இந்தியாவிடம் தோற்ற அவுஸ்திரேலியா இரண்டில் இலங்கையிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

*இந்த போட்டியில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது டி20 போட்டியில் நுவன் குலசேகரவின் சிறந்த பந்துவீச்சாகும். முன்னர் 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்ததாக இருந்தது

coltkn-02-21-fr-09163228474_5236773_20022017_MSS_CMY

Related posts: