அவுஸ்திரேலியா சாதனையை முறியடிக்குமா இந்தியா ?

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றிய இந்தியா, தொடர்ந்து எட்டாவது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியை வென்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இது இந்திய அணிக்கு தொடர்ந்து எட்டாவது டெஸ்ட் தொடர் வெற்றி ஆகும். அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
இதனால் இந்திய அணி அடுத்து வரும், டெஸ்ட் தொடரை வென்றால் அவுஸ்திரேலிய அணியின் சாதனை சமன் செய்யுமா? அடுத்தடுத்து தொடர்களை வென்று அவுஸ்திரேலியா அணியின் சாதனையை முறியடிக்குமா? இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
Related posts:
வடக்கின் போர் : வாகை சூடியது சென்ஜோண்ஸ் கல்லூரி!
தொடரில் வெற்றிபெறும் அணி 2019 ஆம் உலக கிண்ண போட்டிக்கு தகுதி!
உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்!
|
|