அறிவித்தல் இல்லாமல் விசாரணைக்குச் சென்ற மஹேல ஜயவர்த்தன!
Friday, July 3rd, 2020
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில், தமக்கு உத்தியோகபூர்வமாக வருகைத்தருமாறு அறிவிக்கப்படாத காரணத்தினால் எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை என தெரிவித்துவிட்டு மஹெல ஜயவர்தன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று!
விராட் கோஹ்லிக்கு இலங்கை வீரர்கள் வாழ்த்து!
|
|
|


