அருணோதயா மாணவன் நிதுசன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!
Saturday, October 15th, 2016
தேசிய மட்ட ஆண்களிற்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த நிதுசன் 3.70 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Related posts:
சாதனை படைத்த விராட் கோஹ்லி!
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்!
வலுவான நிலையில் இலங்கை!
|
|
|


