அரச அதிபர் வெற்றிக் கிண்ண போட்டிகள் 23 இல் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடத்தப்படும் அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் 2018 இற்குரிய போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்தப்படவுள்ளது.
இவ் அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணம் 2018 போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் 23, 24, 26, 27 ஆம் திகதிகளில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அலுவலர்களிடையே நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் உத்தியோகத்தர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஆஸிக்கு அதிர்ச்சியளித்தது மேற்கிந்தியதீவுகள்!
இன்று ஓய்வு பெறுகின்றார் தில்ஷான் !
அசமந்தப் போக்கே தோல்விக்கு காரணம் – பாக். பயிற்சியாளர் மிக்கி!
|
|