அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆரம்பம்!

Tuesday, August 29th, 2017

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்த்து கொண்ட போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயோர்க்கில் ஆரம்பமானது.

இந்த போட்டி தொடர் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஐந்து முறை வெற்றிக்கிண்ணத்தை பெற்ற சுவிஸர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர், மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த ரபெல் நடால் ஆகியோரில் ஒருவருக்கு வெற்றிக்கிண்ணத்தை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ருத்து கணிப்புக்களுக்கு அமைய பெரும்பாலும் பெடரரும் நடாலும் அரை இறுதி போட்டியில் சந்திக்க வேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் வெற்றியாளரும் இரண்டாம் நிலை வீரருமான பிருத்தானியாவைச் சேர்ந்த ஆன்டி முர்ரே இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளார்

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை முழுமையாக குணமடையாததன் காரணமாக அவர் விலகியுள்ளார். அதேபோன்று சுவிஸர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்கா, சேர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், ஜப்பானை சேர்ந்த நிஷிகோரி மற்றும் கனடாவை சேர்ந்த மிலோஸ் ராவ்னிக் ஆகிய முன்னணி டென்னிஸ் வீரர்களும் உபாதைகள் காரணமாக இந்த தொடர் போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.

இதன் காரணமாக இளம் வீரர்களான ஜேர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஒஸ்ரியாவை சேர்ந்த டொமினிக் திம் குரோஷியாவைச் சேர்ந்த மரின் சிலிச், பிரான்சை சேர்ந்த சோங்கா உள்ளிட்டவர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் சிறந்த வாய்ப்பு உள்ளதாக விளையாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: