அனித்தாவை கௌரவித்தது வவுனியா கல்வியியற்கல்லூரி!
Saturday, November 5th, 2016
பெண்களுக்கான கோலுன்றிப் பாய்தலில் புதிய சாதனை படைத்த யா.மகாஜனக் கல்லூரி மாணவி செல்வி அனித்தா ஜெகதீஸ்வரன் அவர்களை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கௌரவித்துள்ளது. அண்மையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வைத்தே அனித்தா கௌரவிக்கப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனித்தாவையும் பயிற்றுனராக ஆசிரியர் சீ.பாஸ்கரன் அவர்களையும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அவர்கள் கொழும்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்ரில் கோலூன்றிப் பாய்தலுக்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளுக்கான உபகரணங்கள் என்பவற்றை அமைச்சு தந்துதவுவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
யூரோ கிண்ணம்: அரை இறுதிக்க்கு சென்றது ஜேர்மனி!
தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை − கலிஸ் கருத்து!
இந்தியாவின கனவு தகர்ந்தது - ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
|
|
|


