இந்திய அணி வெற்றி!

Thursday, July 5th, 2018

முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ராகுல் சதம் அடிக்க, பவுலிங்கில் குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (30), பட்லர் ஜோடி துவக்கம் கொடுத்தது. பட்லர், சர்வதேச ‘டுவென்டி–20’ யில் 7வது அரைசதம் அடித்தார். ஹேல்ஸ் (8) ஏமாற்றினார். குல்தீப்பின் 3வது ஓவரின் முதல் பந்தில் இயான் மார்கன் (7) சிக்கினார். 3, 4வது பந்தில் பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ‘டக்’ அவுட்டாகினர். 5வது பந்தை மொயீன் அலி (6) தடுத்து விளையாட ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

மீண்டும் வந்த குல்தீப் யாதவ், பட்லரை (69) வீழ்த்தினார். உமேஷிடம், ஜோர்டன் (0) சரிந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5, உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் (5) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் வந்த லோகேஷ் ராகுல் சிக்சர் மழை பொழிந்தார். பிளங்கட் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது  இந்தியா. இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (32) அவுட்டானார். பின் சற்று நிதானம் காட்டிய  ராகுல், 53வது பந்தில் சதம் எட்டினார். சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ரோகித்துக்குப் பின் 2 சதம் அடித்த வீரர் ஆனார் ராகுல்.

கடைசியில் கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க, 18.2 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் (101), கோஹ்லி (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று பட்லரை அவுட்டாக்கிய இந்தியாவின் குல்தீப் யாதவ், சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் ‘ரிஸ்ட்’ (மணிக்கட்டை சுழற்றி வீசுவது) சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.

அதிக ‘ஸ்டம்” T–20’ விக்கெட் கீப்பர்களில் முதலிடம் பிடித்த தோனி!

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ‘ஸ்டம்டு’ செய்த விக்கெட் கீப்பர்களில் முதலிடம் பிடித்தார்  இந்தியாவின் தோனி.

பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய இவர், 91 போட்டியில் 33 ‘ஸ்டம்டு’ செய்தார். அடுத்த இரு இடத்தில் கம்ரான் அக்மல் (32, பாக்.,),  முகமது ஷாஜத் (28, பாக்.,) உள்ளனர்.

20 ரன்கள் எடுத்த கோஹ்லி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், 2000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர், நான்காவது சர்வதேச வீரர் ஆனார். இவர், 60 போட்டிகளில் 2012 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் கப்டில் (2271), பிரண்டன் மெக்கலம் (2140), பாகிஸ்தான் சோயப் மாலிக் (2039) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

Related posts: