அஞ்சலோ மத்யூஸை சந்தித்தார் இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவர்!
Thursday, January 19th, 2017
இலங்கை அணி தலைவர் மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தென்னாபிரிக்காவுடனான எதிர்வரும் 20க்கு 20மற்றும் ஒருநாள் தொடரில் தனது அணி திறன்பட செயல்பட திட்டமிடுகிறது என்று மத்யூஸ் உறுதியளித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்துள்ளது. இந்நிலையிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Related posts:
டென்னிஸ்: பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி!
பகலிரவு டெஸ்ட் : அனுமதி அளித்த பிசிசி!
உலக சாதனைகள் இரண்டை நிறைவேற்ற மாலிங்கவுக்கு வாய்ப்பு
|
|
|


