அசேல குணவர்தனவுக்கு காயம்!
Wednesday, July 26th, 2017
இலங்கை அணியின் வீரர் அசேல குணவர்தன சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இந்தியா அணியுடன் காலி மைதானத்தில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் போது அவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
பந்தோன்றை பிடிக்க முற்பட்ட போது அவரின் கையில் பந்து தாக்கிய நிலையில், இந்த உபாதை ஏற்பட்டுள்ளது.பின்னர் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.இதனால் பெரும்பாலும் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடும் என அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை கிரிக்கெட் சபைக்கு 128 மில்லியன் டொலர்!
மீண்டும் மிரட்டிய மலிங்கா!
நிதானமாக துடுப்பெடுத்தாடும் இலங்கை: 03 விக்கட் இழப்பிற்கு 287 ஓட்டங்கள்!
|
|
|


