ஃபின்னுக்கு காயம்!

Saturday, November 11th, 2017

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீபன் ஃபின் ஆஷஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார். பேர்த்தில், வலைப்பயிற்சியின்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையிலேயே ஃபின்னுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

மூன்று நாட்களுக்கு முன்னர் ஃபின்னுக்கு ஊசியொன்று ஏற்றப்பட்டபோதும் காயம் மேம்பட்டிருக்கவில்லை.

இச்சந்தர்ப்பத்திலேயே இங்கிலாந்துக்கு திரும்பவுள்ள ஃபின், சத்திரசிகிச்சையொன்று தேவையா என முழங்கால் நிபுணரொருவரை சந்தித்து ஆலோசனை பெறவுள்ளார்.ஃபின்னுகுப் பதிலாக, டொம் குரான் அல்லது லியம் பிளங்கெட் இங்கிலாந்துக் குழாமில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: