Orion நட்சத்திரத் தொகுதியின் தெளிவான உருவம் வானியலாளர்களால் படம்பிடிப்பு!

சர்வதேச வானியளாளர்கள் VLT (Observatory’s Very Large Telescope) இன் உதவியுடன் முன்னெப்போதுமில்லாதவாறு மிக தெளிவான, விளக்கமான Orion நட்சத்திரத் தொகுதியினை படம் பிடித்துள்ளனர்.
அதன் அழகிற்கு அப்பால் அது பல வகையான மண்ணிற, நிறை குறைந்த துகள்களை கொண்டிருப்பதை இம்முறை அவதானிக்க முடிந்திருக்கின்றது.
இவை நட்டத்திரங்களாள மாற இயலாமல் போன துணிக்கைகள் என கருதப்படுகின்றன.இத் துணிக்கைகள் மேற்படி தொகுதிக்கு புதுவகை ஒளியை அளிக்கிறது. இதுவரையில் Orion ஆனது மனித உருவிலான நட்சத்திர தொகுதியாகவே பார்க்கப்பட்டது.
ஆனாலும் Orion இன் வாள் பகுதியில் காணப்படும் மைய நட்சத்திரமானது உண்மையில் நட்சத்திரமில்லை என சொல்லப்படுகிறது. இது பெரிய மூலத் திணிவாகவே பார்கப்படுகிறது. இதிலிருந்து தான் ஏனைய நட்சத்திரங்கள் உருவாவதாக சொல்லப்படுகிறது.
மேற்படி உடுத்தொகுதி 1 350 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.குறித்த புகைப்படம் VLT இனுடைய HAWK-I infrared கருவி மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.இதனால் தூசுகள், சிதைவுகளுக்கு மத்தியில், குறைவான வெப்பநிலையில் அதன் தெளிவான உருவத்தை அவதானிக்க முடிந்திருக்கிறது.
அவதானிக்கப்பட்ட மண்ணிற துணிக்கைகள் வாயுக்களை விடவும் பெரியதாயினும், அவற்றின் திணிவு மிக குறைவு. அவை அணுக்கரு பிணைவு மூலம் நட்சத்திரங்களாக மாற முடியாத அளவிற்கு திணிவு குறைவானவை என சொல்லப்படுகிறது.
Related posts:
|
|