5G வலையமைப்பினை அறிமுகம் செய்ய 30 மில்லியன் டொலர்களை முதலீடு!

பல்வேறு நாடுகளிலும் 5G வலையமைப்பு மிக வேகமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூரிலும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 5G வலையமைப்பினை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக 40 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.அதாவது ஏறத்தாழ 29.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இந்த திட்டத்தினை சிங்கப்பூரின் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஸ்வார்ன் வெளியிட்டுள்ளார்.
சீனாவின் ரெலிகொம் நிறுவனமான ஹுவாவி உலகின் பல்வேறு நாடுகளில் மொபைல் வலையமைப்பினை வழங்கி வருகின்றது.
இந்நிறுவனமே சிங்கப்பூரில் 5G தொழில்நுட்பத்தினை வழங்க அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
2600 கோடிக்கு டென்ஸ் போர்ட்ஸ்-ஐ வாங்கியது சோனி டிவி!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்தார் - பிரித்தானிய இணையம்!
பூமியே பாறையாக மாறிவிடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
|
|