250,000 டொலர்கள் மட்டும்தான் விண்வெளிக்கு செல்ல நங்கள் தயாரா?

Wednesday, August 3rd, 2016

விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான உரிமத்தை வெர்ஜின் கெலக்ட்டிக் (Virgin Galactic) என்ற நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான அனுமதியை அமெரிக்க விமான நிர்வாகத்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விண்வெளி பயணத்தின் போது 6 பேர் குறித்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது வரையில் 700 பேர் வரை விண்வெளிக்கு சென்று வர முன்பதிவு செய்துள்ள நிலையில், கட்டணமாக 250,000 டொலர்கள் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், விண்வெளிக்கு பயணிகளை அழைத்து செல்லும் விமானம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை பயணிக்கும் இந்த விண்வெளி வாகனத்தில் இருக்கும் பயணிகள் புவி ஈர்ப்பு விசை மாற்றத்தை உணரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: