2.5 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய நாம் உயிர்வாழ காரணமான பக்டீரியாக்கள் படிமங்கள் கண்டுபிடிப்பு!

Saturday, December 3rd, 2016
அனேகமான உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமாக ஒட்சிசன் வாயு காணப்படுகின்றது. இவ்வாயுவானது தாவரங்களின் ஒளித்தொகுப்பு மூலமே சூழலுக்கு கிடைக்கின்றது என்றே நம்மில் அனேகமானவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் அதையும் தாண்டி அல்காக்கள், பக்டீரியாக்கள் போன்ற வேறு சில உயிரினங்களும் ஒட்சிசன் வாயு உற்பத்திக்கு காரணமாக அமைகின்றன. இப்படியிருக்கையில் பூகோளத்தில் ஒட்சிசன் வாயு அதிகரிப்புக்கு காரணம் என கருதப்படும் பக்டீரியா இனம் ஒன்றின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்காவின் இரு வெவ்வேறு இடங்களில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 2.5 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இப்பக்டீரியாக்கள் தோன்றும் முன்னர் பூமியில் ஒட்சிசனின் அளவானது தற்போது உள்ளதை விடவும் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்ததாகவும், ஆனால் இவற்றின் தோற்றத்தின் பின்னர் ஒட்சிசன் அளவு அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: