150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு!

Friday, October 27th, 2017

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 152 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இச்தையோசோர் எனப்படும் உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இவ்வகையான உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

252 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியான மெசோசொயிக் யுகத்துக்கு உரிய கற்பாறைகளுக்கு இடையில் இருந்து இந்த எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்தையோசோர் என்ற இது கடல்வாழ் உயிரினமாகும்.தற்போது மீட்கப்பட்டுள்ள அதன் எச்சமானது 18 அடி நீளமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: