வேற்றுகிரகவாசிகளின் சிக்னலை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்!

Thursday, September 1st, 2016

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா?இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர்.

இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கான நவீன ரேடியோ னொலி தொலை நோக்கிகளை  விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.  பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீன தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைத்துள்ளது. உலகில் இது போன்ற தொலை நோக்கி புர்டோ ரிகோவில் அமைக்கபட்டு உள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய  புதிய திட்டம்  ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.

இது போல் ரஷ்யாவின் மிகப்பெரிய தொலை நோக்கியை நிறுவி உள்ளது. ரஷ்யாவின் தொலைநோக்கியான செலன்சுக்கியா ( Zelenchukskaya) ரத்தன்-600 ரேடியோ தொலைநோக்கி  பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்து உள்ளது.இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த சூரியன் போன்ற நட்சத்திரத்தில் இருந்து வர வாய்ப்பு உள்ளது என்றும், 94.4 ஒளியாண்டுகள் கடந்து வருகிறது எனவும் கணித்துள்ளது.

இது வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து Extraterrestrial Intelligence நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து தொலைநோக்கி ஆராய்ச்சியாளர் யூலியா சோடின்கோவா கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக தொலை நோக்கி மூலம்  ஆய்வு நடைபெற்று வருகிறது. சூரியன் போன்ற நட்சத்திரங்களை ஆய்வு செய்து வருகிறோம். இந்த சிக்னல் குறித்து அறிவியல் பூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கபடவில்லை தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். அபூர்வமானதொரு சிக்னல கிடைத்து உள்ளது. இது குறித்து ஆய்வு நடக்கிறது.ஆனால் பெரும்பாலும் ஒரு தரைவழி இடையூறு இருப்பதாக காட்டுகிறது.

Related posts: