வேகமாக உண்ணும் போட்டியில் ஜப்பானியர் உயிரிழப்பு!

Thursday, November 24th, 2016

வேகமாக உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொண்ட ஜப்பானியர் ஒருவரின் உடலில் ஒரு அரிசி உருண்டை அடைத்ததால் உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 13ஆம் திகதியன்று, ஜப்பானில் உள்ள ஷிகா பகுதியில் உள்ள ஹிகோன் என்ற இடத்தில் நடைபெற்ற வேகமாக உணவு உண்ணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த நபர், மூன்று நிமிடங்களில் ஐந்து ஓனிகிரி எனப்படும் அரிசி உருண்டைகளை உண்ண முயற்சித்த போது மயங்கி விழுந்தார்.

மீண்டும் நினைவு திரும்பாமலே, மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்ததாக இந்த போட்டியின் அமைப்பாளர்கள் ஜப்பானிய ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர். இந்நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

வேகமாக உணவை உண்ணும் போட்டிகள் ஜப்பானில் பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஒரு நிகழ்வாகும்.

வேகமாக உணவை உண்ணும் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது மட்டுமல்ல, தங்களின் வயிறு அல்லது உணவுக் குழாயை சேதப்படுத்திக் கொள்ளும் ஆபத்தும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

coltkn-11-24-fr-05153648416_5042765_23112016_mss_cmy

Related posts: