வியாழனில் கடும் புயல்  – நாஷா!

Thursday, November 23rd, 2017

வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பதாக நாசா அனுப்பிய ஜூனோ எனப்படும் விண்கலம் கண்டறிந்துள்ளது.

வியாழன் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கமரா வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்ப நிலைப்பாடுகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில் ஜூனோ விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இக்கிரகத்தின் வடபுலத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் கடந்த மாதம் 24 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. அப்போது விண்கலம் வியாழன் கிரகத்தின் மேகக் கூட்டங்களின் மீது 10,108 கி.மீட்டர் தூரத்தில் பறந்தது.

புகைப்படத்தில வியாழன் கிரகத்தில் புயல் வீசும் போது மேகக் கூட்டங்கள் களைந்து இருப்பது தெரிகிறது. கரு மேகங்கள் திரண்டுள்ளன.

Related posts: