விதிமுறைகளை மீறி செயற்பட்ட 3.6 இலட்சம் ட்விட்டரில் கணக்குகள் முடக்கம்!
Saturday, August 20th, 2016
2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயற்பட்ட சுமார் 3.6 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், விதிமுறைகளை மீறி செயற்படுவதாக ட்விட்டர் மூது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்நிறுவனம் கடந்த ஆண்டு 1.25 இலட்சம் கணக்குகளை முடக்கியது.இந்நிலையில், மேலும் 2.35 இலட்சம் ட்விட்டர் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 3.6 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. ட்விட்டர் வலைத்தளத்தைப் பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அதுபோன்ற கணக்குகளை வலைத்தளத்தில் இருந்து நீக்குவதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
Related posts:
சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் - உருவாக்கியது நாசா!
65 ஆயிரம் டொலருக்கு விற்பனையானது ஹிட்லரின் உலக உருண்டை!
|
|
|


