விண்வெளியில் சொகுசு விடுதி!
Monday, April 9th, 2018
அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு விடுதி ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த விடுதியில் தங்குவதற்கான கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஓரியோன் ஸ்பேன் எனும் நிறுவனம், 2021ஆம் ஆண்டு விண்வெளி விடுதி ஒன்றை திறக்க உள்ளது.
இந்த விடுதியில் தங்குவதற்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் ஏற்கனவே இந்த ஓட்டல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடுதியில் தங்க முன்பதிவுத் தொகையாக 51 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. மேலும் இங்கு ஆறு பேர், 12 நாட்களுக்கு தங்குவதற்கு சுமார் 61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த தகவலை, கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் மாநாட்டில் ஓரியோன் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
பரிதாபமாக இறந்த மிருகங்கள்! மிருககாட்சி சாலையின் சோகம்
மலேரியா நுளம்புகளை தடுக்கும் கோழிகள்புதிய கண்டுபிடிப்பு!
பேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் விரைவில்!
|
|
|


