ருவிட்டரில் 140 எழுத்துக்களுக்கு பதில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யலாம்!

ட்விட்டரில் 140 எழுத்துக்களுக்கு பதில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யும் வசதி, சோதனை அடிப்படையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தைப் பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது.
இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, சோதனை முன்னோட்டமாக 140 எழுத்துக்களுக்கு பதிலாக 280 எழுத்துக்கள் வரை பதிவிடலாம் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் வரவேற்பைப் பெறும் என தாம் நம்புவதாக ட்விட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்த மாணவி!
அதிரடி வசதியுடன் வாட்ஸ் ஆப்!
இலங்கையில் புதிய தொழில்நுட்ப அலங்கார கட்டமைப்பு!
|
|