மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரக கீபோர்ட்!
Wednesday, November 2nd, 2016
வயர்லஸ் வசதியுடன் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது புதிய ரக கீபோர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ரக கீபோர்டுகள் ஏஏஏ வகை பேட்டரிகள் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய கீபோர்டு தயாரிப்புக்கு ஒரு ஆண்டு வரை உத்தரவாதம் வழங்குகிறது.மிகவும் ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்ட இந்த கீபோர்டு சாம்பல் நிறத்தில் கிடைக்கிறது. இது 460.14×229.22×34.73 mm அளவில் நேர்த்தியான திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் எடை 1,012 கிராம் மட்டுமே..!
ப்ளூடூத் வசதியுடன் இயங்ககூடிய கணினிகளில் இந்த கீபோர்டை 50 அடிகள் தூரத்தில் வைத்து கூட பயன்படுத்த முடியும்.இது ஒரு ரிமோட் போன்று செயல்படுத்தப்படுகிறது சாதாரண கீபோர்டை விட சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் டைப் செய்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது.
அண்ட்ரொய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் அண்ட்ரொய்டு 4.4.2 கிட்கேட் போன்ற தொழில்நுட்பம் கொண்ட கருவிகளில் இந்த கீபோர்டை பொருத்தி பயன்படுத்தலாம்.மேலும், விண்டோஸ் 8, விண்டோஸ் 10 வகை ஒ.எஸ் மற்றும் மேக் ஒ.எஸ் வி10.10.5 / 10.11.1 / 10.11.4 ஆகிய ஒ.எஸ்களில் இந்த கீபோர்டை பயன்படுத்த முடியும்.

Related posts:
|
|
|


