மனித மூளையில் பக்ரீரியாக்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Thursday, November 22nd, 2018

இதுவரையிலும் குடல் பக்ரீரியாக்கள் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அண்மையில் பேர்மின்காம் அலாபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளில் மனிதரின் தலைப் பகுதியிலும் பக்ரீரியாக்கள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

இவை மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

மேலும் நரம்புக் கலங்களின் தொடர்பாடலில் முக்கிய பங்குவகிக்கும் “அஷ்ரோசைற்ஸ்” எனப்படும் கலங்களிலும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இப் பக்ரீரியாக்கள் குருதிக் குழாய்கள் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதற்கென மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் இறந்து போன 34 பேரின் மூளைகள் பெறப்பட்டு ஆராயப்பட்டிருந்தன.

இதில் பாதிப் பேர் முளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், மீதிப் பேர் இறப்பதற்கு முன் நல்ல தேக ஆரோக்கியத்துடன் காணப்பட்டவர்களாகவும் இருந்திருந்தனர்.

எனினும் இருவகை மனிதர்களிலும் பக்ரீரியாக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் எலிகள் மீதும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதும் ஆரோக்கியமான எலிகளின் தலையில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: