பேஸ்புக்கில் வந்துவிட்டது சூப்பர் அப்டேட்
Sunday, February 5th, 2017
சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக் தற்போது சூப்பரான அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.
Discover People என்னும் புதிய விடயம் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. LinkedIn மற்றும் Tinder சமூகவலைதளத்தில் உள்ள விடயங்கள் பேஸ்புக்கில் கலவையாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் புதிய நட்புகள் கிடைக்கும், நாம் வசிக்கும் நகர மக்களின் பேஸ்புக் நட்புகளை கூட இதன் மூலம் பெற முடியும்.
நாம் இருக்கும் பேஸ்புக் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் பார்க்க முடியும்.
அடுத்தவர்களின் profileலுடன் நம் profileலில் ஒற்றுமையாக உள்ள நண்பர்கள் பட்டியல், location மற்றும் Facebook Pagesஐயும் காண முடியும்.
Tinderல் இருப்பதை போல புதிய நட்புடன் இணையும் வரை profile மூலம் swipe செய்யலாம்.
பின்னர் அவர்களை friend list, follow, மற்றும் மெசேஜ் அனுப்பலாம்.
இந்த வசதி தற்போது iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கணினியில் பேஸ்புக் உபயோகப்படுத்துபவர்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


