பூமியின் நிலைமை என்ன? – விஞ்ஞானிகள் தகவல்!

Monday, February 6th, 2017

இந்தாண்டு மட்டும் பூமிக்கு மிக அருகில் நான்கு எரிகற்கள் சுற்றி வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பூமியைச் சுற்றி ஆயிரக்கணக்கான எரிகற்கள் மற்றும் விண்மீன்கள் சுற்றி வருகின்றன. ஆனால் அவைகளில் சில பூமியைத் தாக்குவதற்கு 1.35 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நட்சத்திரமாக இருப்பது கிளிசி 710. இது பூமியின் மீது மோதுவதற்கு 1.35 மில்லியன் ஆண்டுகள் என்று கணிக்கப்படுகிறது. அதுவரை தாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரும் 25 ஆம் திகதி ஒரு மர்மப் பொருள் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புண்டு எனவும், இதனால் பூமியில் மிகப்பெரிய பேரிழப்புகள் ஏற்படும் என்று ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவை பூமியை தாக்குவதற்கு 0 சதவீதம் கூட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமின்றி கடந்த வியாழக்கிழமை 82 அடி அகலமுள்ள பாரிய எரிகல்லான BS32 பூமியின் மீது மோதாமல், பாதுகாப்பாக கடந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பூமி மீது பாரிய எரிகற்கல் மோதி, அதிக பாதிப்புகள் ஏற்பட்டு 160 ஆண்டுகள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து மேலும் ஒரு விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், வரும் 2700 ஆம் ஆண்டில் 1600 அடி அகலமுள்ள ஒரு மர்மபொருள் பூமியின் மீது மோதுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: