பூமிக்கு மிக அருகில் பயங்கரம்!!

Friday, October 21st, 2016

நாம் பகலில் வேலை செய்வதும், இரவில் உண்பதும் உறங்குவதுமாக, ஜாலியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எந்த நேரமும் தூங்காமல் பூமிக்கு வரும் ஆபத்துக்களை ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள் விண்வெளி  ஆராய்ச்சியாளர்கள்.

அப்படி ஆராயும் போது  அவர்கள் கண்டறிந்த விஷயம் ஒன்று தான், பூமியைத் தாக்க அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ராட்ஷச விண் கல். அதிலும் அந்த கல் மிகபெரிய மலை   போன்ற தோற்றத்தில் இருக்கிறதாம்..!

பூமியில் மோதினால் ஒரு நொடியில் பூமி  எரிந்து சாம்பல் ஆகி விடும் என்கிறார்கள்.அதை விட இது போன்ற நூற்றுக்கணக்கான கற்கள் பூமியை சுற்றி வந்த வண்ணம் உள்ளதாம். அதில்     பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன என்கிறார்கள்.

எனவே, பூமிக்கு பெரிய ஆபத்து ஏற்டுவதில்லை என்கிறார்கள்.இப்படி ஒரு சூழ்நிலையில் விண்ணில் சுற்றிவரும் மற்றொரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2015ல் -இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்துக்கு மிக அருகே சுற்றி வருகிறது.15 கிலோ மீட்டர் அகலத்தில் இந்த கல் உள்ளது. அது சுற்றுப்பாதை சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வந்து விடும். அப்படி வரும் போது அசுர வேகத்தில் பூமியில் வந்து மோதும் என்று கணிக்கிறார்கள்.

பூமியில் மோதும்போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும். இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் நொடிப்பொழுதில் இருக்கும் அதனையும் எரிந்து பஷ்பமாகிவிடும் என்கிறார்கள்.அதே நேரம் இந்த ஆண்டில்  இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை என்றாலும் கூட கன நேரத்தில் தனது சுற்றும் திசையை மாற்றி விடும்.

அப்படி மாறும் போது அதன் பின் ஓரிரு வாரத்தில் பூமியின் ஈர்ப்பில் சிக்கி பூமியை தாக்கும். இன்னும்   சில ஆண்டுகளில் இந்த மோதல் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்..!எப்படி அந்த அழிவில் இருந்து  மனித குலத்தைக் காப்பது என்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள்.

oJuN9ffePlanet_Liveday_ji5qpd

Related posts: