பூமிக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து?

Wednesday, February 1st, 2017

சமீப காலமாக பூமிக்கு பாரிய ஆபத்துக்கள் காத்திருப்பதாகவும், இதனால் அழிவை எதிர்நோக்க வேண்டிய  சூழல் ஏற்படும் எனவும் பல தகவல்கள் உலாவருகின்றன. எனினும் இதனை நிரூபிக்கும் விதமாக பல்வேறு அனர்த்தங்கள் பூமியில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

தற்போது அரிஷோனா பாலைவனப் பகுதியில் ஏற்பட்டுள்ள சம்பவமும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளது.அதாவது சுமார் 3.2 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு நிலத்தில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

இப் பிளவு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை முதன் முறையாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இதன் அகலம் 3 மீற்றர்கள் வரை இருப்பதுடன், இந்த அளவுகள் எதிர்காலத்தில் மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இப் பிளவானது 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட கூகுள் ஏர்த் புகைப்படம் மூலம் முதன் முதலாக இனங்காணப்பட்ட நிலையில் தற்போது ட்ரோன் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி நேரடியாக வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: