புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய அப்பிள் நிறுவனம்!

Wednesday, June 15th, 2016

ஸ்மார்ட் போன் உலகின் ஜாம்பவானாக இருக்கும் அப்பிள் நிறுவனம் சர்வதேச மென்பொருள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் தனது புதிய “சீய்ரா” (Sierra) இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது.

அமெரிக்காவிலுள்ள சான்பிரான் சிஸ்கோ நகரில் சர்வதேச மென்பொருள் மேம்பாட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.

இதில் அப்பிள் நிறுவனத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “சீய்ரா” (Sierra) என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய இயங்குதளம், அப்பிள் வாட்ச், டிவி, ஐபோன் மற்றும் மேக் கம்ப்யூட்டரை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related posts: