பிரத்தானியவில் ஏலத்திற்கு வரும் டூடூ பறவையின் எலும்புக்கூடு!
Friday, August 26th, 2016
பிரித்தானியாவில் ஏறத்தாழ முழுவதுமாக அழிவுபெற்றுள்ள டூடூ பறவையின் எலும்புக் கூடு, விற்பனைக்கு வருகிறது.
இது நவம்பர் மாதம் ஏலத்திற்கு வருகிறது; சுமார் ஒரு நூற்றாண்டில் விற்பனைக்கு வரும் முதல் டூடூ எலும்புக்கூடு இதுவாகும். பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு இந்த எலும்புக்கூடு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுவதற்கு எளிதான இந்த பறக்க முடியாத பறவை, மொரீஷியஸ் தீவுகளில் வாழ்ந்தவை; விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கப்பட்ட எழுபது வருடங்களுக்கு பிறகு இந்த பறவைகள் அழிந்துவிட்டன. ஒரு தனிப் பறவையின் எலும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டூடூ எலும்புக்கூடு உலகிலேயே ஒன்றுதான் உள்ளது; அது மொரிஷியஸில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஷேக்ஸ்பியரின் அரிய புத்தகம் ஒன்று கண்டுபிடிப்பு
Nokia 8 Supreme ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்!
சீனாவின் 'டியன்வன்௲1' செவ்வாயில் தரையிறங்கியது!
|
|
|


