பாரிய சரிவை சந்திக்குமா டுவிட்டர்!

Monday, March 26th, 2018

பல மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்ளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு டுவிட்டர் நிறுவனத்திடமும் காணப்படுகின்றது.

பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் தனி நபர் தகவல்கள் திருப்பட்டு பலத்த சர்ச்சைகளை உருவாக்கி வருகின்ற சந்தர்ப்பத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியும் அந்த நிறுவனத்தினை விட்டு வெளியேறுகின்றார்.

Michael Coates எனும் இவர் கடந்த 2015ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிவந்தார்.

இந்த தகவலை அவதே தனது டுவிட்டர் கணக்கினூடாக தெரிவித்துள்ளார்.

இவருக்கு பதிலாக Joseph Camilleri என்பவர் நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டு வரும் Alex Stamos என்பவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடுன் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: