நோக்கியா அறிமுகம் செய்யும் மற்றுமொரு இலத்திரனியல் சாதனம்!
Friday, June 23rd, 2017
ஒரு காலத்தில் கைப்பேசி வடிவமைப்பில் கொடி கட்டி பறந்த நிறுவனமாக நோக்கியா இருந்தது. இடையில் தளம்பல்களை சந்தித்து தற்போது மீண்டும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதித்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு இலத்திரனியல் சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.அதாவது உடல் நலத்தைப் பேணக்கூடிய கேட்ஜட் ஒன்றினையே அறிமுகம் செய்யவுள்ளது.இதன் ஊடாக BMI மற்றும் குருதி அமுக்கம் என்பனவற்றினை அறிந்துகொள்ள முடியும்.
Wi-Fi வலையமைப்பின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இதனை இணைத்து பயன்படுத்த முடியும்.மேலும் இச் சாதனத்தின் ஊடாக பெறப்படும் அளவுகள் நம்பிக்கை மிகுந்ததாகவும், தரம் வாய்ந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறெனினும் இதற்கான அடித்தளத்தினை Withings நிறுவனமே இட்டுள்ளது. ஆனால் நோக்கியா வியாபாராக் குறியீட்டின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


