தொல்பொருட் சின்னங்கள் வவுனியாவில் கண்டுபிடிப்பு!

வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபி கள் உள்ளிட்ட பல தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இதன்போது சுமார் 50 ஓலைச்சுவடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பொறுப்பதிகாரி புலஸ்திகம சிரிரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும், 10 அடி உயரமான சிலைகளும் 110 க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வரலாற்று சிறப்புடைய பண்டைக்கால கட்டடங்களும் வவுனியா மஹா கச்சக்கொடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்!
பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற பாரிய விண்கல் -ஆய்வாளர்கள் திகைப்பு!
தொழில்நுட்பக் கோளாறு - சீனாவின் திட்டம் தோல்வி!
|
|