தேடுதல் இணையத்தளங்களுக்கு சீனா புதிய விதிமுறை!

Sunday, June 26th, 2016

தேடுதல் வசதி வழங்கும் இணையதளங்கள், அவை வழங்குகின்ற தேடல் முடிவுகளில் விளம்பரத்திற்கு பணம் கொடுப்போரை இனம்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற விதிமுறைகளை சீனா முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

உடல்நல பராமரிப்பு பொருட்களுக்கான லாபகரமான விளம்பரங்கள் பற்றி இணைதள பயன்பாட்டாளர்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளதாக சீனாவின் இணையவெளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்த சட்டத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்போம் என்று சீனாவின் மிக பெரிய தேடுதல் வசதி அளிக்கும் இணையதளமான `பெய்து’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

அரிதான புற்றுநோயால் அவதியுற்ற மாணவர் ஒருவர், பெய்து, இணையதளத்தில் தேடி கிடைத்த முடிவுகள் வழியாக கண்டறிந்த சிகிச்சையை சோதித்து பார்த்து, இறந்ததை அடுத்து, அந்த நிறுவனம் பொது மக்களின் கோபத்திற்கு உள்ளானது.

Related posts: