தாழ்வுப்பாடு கடலோரப் பகுதியில் கரையொதுங்கும் அரிய உயிரினம்!

மன்னார் தாழ்வுப்பாடு கடலோரப் பகுதியில் கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பன்றியானது 5அடி நீளமும் 450-500 கிலோகிராம் எடை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடற்கரையில் ஏதோ விசித்திரமான பொருள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து உரிய இடத்துக்கு விரைந்த மன்னார் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ இது அரிய வகையிலான கடற்பன்றி என்பதனை தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ தெரிவிக்கையில்,
இவ்வகை கடல் பன்றியானது இலங்கைக்கு மிகவும் அபூர்வமானதொன்றாகும். இலங்கையின் கடற்பரப்பில் அரிய வகையிலேயே கடல்பன்றிகளே காணப்படுகின்றன. எமது நாடுக்கென்றே மொத்தமாக 8 கடல் பன்றிகளே உரித்துடையவையாகும். அவற்றுள் பாதி அழிவை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது மிகுதியும் வெகுவாக அழிந்து கொண்டு வருகின்றது. தற்போது இவை அழிவடைவதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோன்ற உயிரினங்கள் அழிவடைவதை தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|