சூரிய கிரகத்திற்கு நெருக்கமாக சென்ற நாசாவின் பார்கர்!  

Tuesday, October 30th, 2018

முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து  கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டது .

சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலம் வழங்கும் என்று நாசா கூறியுள்ளது.

இதன் எடை 612 கிலோ, நீளம் 9 அடி, 10 இன்ச் 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை. திங்களன்று பார்கர் சூரியனில் இருந்து  26.6 மில்லியன் மைல்கள்  (4.3 கோடி  கிலோமீட்டர்) தூரத்திற்கு பயணம் செய்து 1976 ல்  ஹீலியோஸ்-2  விண்கலத்தின் சாதனையை முறியடித்தது.

அடுத்த ஏழு ஆண்டுகளில் சூரியனுக்கு நெருக்கமாக 24  மணி நேரமும்  சூரியனை கண்காணிக்கும். திங்கட்கிழமை பிற்பகுதியில் இன்னொரு சாதனையை பார்கர் புரிந்து உள்ளது.   சூரியனைப் பொறுத்தவரை, ஹீலியோஸ்-2 இன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 153,454 மைல் (247,000 கிலோமீட்டர்).ஆகும்.

Related posts: