சூரியனில் சக்திவாய்ந்த வெடிப்புகள்!

Tuesday, September 12th, 2017

சூரியனில் இரு சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அவதானித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நிகழ்ந்திருக்கும் இந்த வெடிப்புகளில் இரண்டாவது வெடிப்பு 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் சூரிய சுழற்சிய ஆரம்பமானது தொடக்கம் நிகழ்ந்த சக்திவாய்ந்த சூரிய சுவாலை வீச்சாக உள்ளது.

இந்த கதிர்வீச்சு பூமியின் மேற்பரப்பை எட்டினால் தொலைத்தொடர்பு செய்மதிகள், ஜி.பி.எஸ் மற்றும் மின்சார கட்டமைப்புகளில் இடையூறு விளைவிக்கும் அபாயம் உள்ளது. இதனை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுகூடம் அவதானித்துள்ளது. இதன்படி இந்த சூரிய வெடிப்பு எக்ஸ் நிலைக்கு தரப்படுத்த ப்பட்டிருப்பதோடு இது பூமியின் சூரியன் பக்கத்தை பார்த்திருக்கும் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு உயர் அதிர்வெண் அலைவரிசை தொலைத்தொடர்புகளில் இடையூறு ஏற்படுத்தும் என்று விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த கதிர்வீச்சு வளிமண்டலத்திற்குள் நுழைவதில்லை என்பதோடு மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தாது. இந்த இரு சூரிய வெடிப்புகளும் சூரியனின் அதிக இயக்கம் கொண்ட பிரந்தியத்திலேயே ஏற்பட்டுள்ளது.

Related posts: