சீனாவில் உலகின் மிகப்பெரிய கொசு கண்டுபிடிப்பு!

Wednesday, April 25th, 2018

உலகின் மிகப்பெரிய கொசு வகை ஒன்றினை சீனாவில் உள்ள பூச்சியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அருங்காட்சியத்தின் பூச்சியியல் விஞ்ஞானிகள் 11.15 செ.மீ நீள  இறக்கை அளவு கொண்ட அந்த பிரமாண்ட கொசுவினைக் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய பூச்சிகள் அருங்காட்சியகத்தின்  பொறுப்பாளராக இருப்பவர் ஷாவ் லி.

இதுதொடர்பாக ஷாவ் லி சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இந்த பிரமாண்ட கொசுவானது ஹோலோருசியா மிகாடோ குடும்பத்தினைச் சேர்ந்ததாகும். கடந்த ஆண்டு சிச்சுவான் மாகாணத்தின் செங்டூ பகுதியில் உள்ள குய்ன்செங் மலைப் பகுதியில்நடைபெற்ற ஆய்வுப் பயணம் ஒன்றின் பொழுது இது கண்டறியப்பட்டது.

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த பூச்சியியல் ஆராய்ச்சியாளரான ஜான் வெஸ்ட்வுட் முதன்முதலாக ஜப்பானில் ஹோலோருசியா மிகாடோ குடும்ப கொசுக்களைக் கண்டறிந்தார். பொதுவாகஇவ்வகை கொசுக்களின் இறக்கை 8 செ.மீ நீளம் வரை வளரும் தன்மை கொண்டது

இவ்வகை கொசுக்கள்  பார்க்க அச்சமூட்டும் வகையில் அமைந்திருந்தாலும், இவை மனிதனின் ரத்தத்தினை குடிப்பதில்லை. தேனை மட்டுமே குடித்து உயிர் வாழும். நன்றாக வளர்ந்த இவ்வகைகொசுக்கள் சிலநாட்கள் மட்டுமே உயிர் வாழும்.

இவை அதிக எடை காரணமாக பறக்காது. அப்படியே பறந்தாலும் அது தாவுவது போல இருக்கும். இவை பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: