சிகிரியா குகைக்கு அருகில் சிக்கிய வரலாற்று ஆதாரங்கள்!

வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் கிடைத்த சிங்கத்தின் உருவத்தினால் முக்கிய பல சாட்சிகளை கண்டுபிடிக்க முடியும் என மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த அகழ்வின் போது அந்த சிங்கத்தின் உருவத்திற்கு மேலதிகமாக மணிகள், இரும்பு மற்றும் களிமண் ஜாடிகள் கிடைத்துள்ளதாக நிதியத்தின் இயக்குனர் ஜெனரல் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிகிரியாவின் சிங்க உருவம் தொடர்பில் பல்பேறு அனுமானங்கள் உள்ளது. எப்படியிருப்பினும் அதன் வடக்கு பகுதியில் கிடைத்த சிங்க உருவத்திற்கமைய சிங்கத்தின் பாதத்தில் மேல் உள்ள சிங்கத்தின் உருவத்திற்கு சமமானதாகவும், கட்டடக்கலை பற்றிய உறுதியான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த அகழ்வில் கிடைத்த களிமண் ஜாடிகள் வெளிநாட்டு தொடர்புடையதாக உள்ளதாகவும், அதற்கமைய சிகிரியா எல்லையில் அரச காலத்தில் இடம்பெற்ற சர்வதேச தொடர்பினையும் வெளிப்படுத்தி கொள்ள முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
|
|