சாம்பல் கக்கும் எரிமலை: காற்றில் கலந்த துகள்களால் பொதுமக்கள் அவதி!

Tuesday, April 19th, 2016

மெக்சிகோவில் Popocatepetl எரிமலை வெடித்து தொடர்ந்து சாம்பல் கக்கி வருவதால் காற்றில் கலந்திருக்கும் துகள்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவின் பியூப்ல நகரில் உள்ள இந்த எரிமலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் எரிமலைகளில் ஒன்று. திங்கள் கிழமை அதிகாலையில் திடீரென்று வெடித்து சாம்பல் கக்கத் துவங்கியுள்ளது.

கொத்துக் கொத்தாக சாம்பலை கக்கி வருவதால் இந்த புகை மூட்டம் இரண்டு மைல் தொலைவு வரை வியாபித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அங்குள்ள விமான நிலையத்தை சில மணி நேரம் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

புகை மூட்டமும் சாம்பல் துகளும் காற்றில் அதிகமாக கலந்துள்ளதால் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என நகர நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் எரிமலைக்கு சுற்றும் 12 கிலோ மீற்றர் வரை குடியிருக்கும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும் நகரம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் குழந்தைகளும் முதியவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Popocatepetl எரிமலை கடைசியாக வெடித்துச் சிதறியபோது அப்பகுதியில் உள்ள 40,000 பொதுமக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றினர்.

Related posts: