சாதனை படைத்தது Netflix நிறுவனம்!
Monday, January 23rd, 2017
Netflix ஆனது அமெரிக்காவினை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகக் காணப்படுவதுடன், ஒன்லைனில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்கட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் நிறுவனமாகவும் காணப்படுகின்றது.
இந்த நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தனது வருவாய் தொடர்பான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த காலாண்டுப் பகுதியில் மட்டும் சுமார் 2.35 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.இதேவேளை 2015ம் ஆண்டின் இதே காலாண்டுப் பகுதியில் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்களையே ஈட்டியிருந்தது.
தவிர 2016ம் ஆண்டின் இறுதி காலாண்டில் அமெரிக்காவில் 1.93 மில்லியன் சந்தாதாரர்களையும், உலகம் முழுவதிலும் 5.12 மில்லியன் சந்தாதாரர்களையையும் கையாண்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் அசலான (Original) வீடியோக்களை அல்லது காட்சிகளை ஒன்லைன் ஊடாக ஒளிபரப்பி வருவதனால் சந்தாதாரர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.அத்துடன் வருமானமும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.

Related posts:
|
|
|


