குடிக்க நீரின்றி இறந்த உயிரினங்கள்! அதிர்ச்சித் தகவல்!

Wednesday, August 3rd, 2016

5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.

அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது. இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிந்து விட்ட, தங்களை போன்ற மிகப் பெரும் உயிரினங்களை விட ஆயிரக்கணக்கான வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ்ந்துள்ளன.

Related posts: